சிறுகதைகள்




............................................1 ).......ஆறாத காயங்கள்


*******
……………என்னை விட அவளுக்கு சில மாதங்கள்தான் வயதில் வித்தியாசம். வாரத்தில் இரண்டு நாட்கள் தான் அவளைப் பார்ப்பேன். என் கண்களுக்கு அவளைப் பார்க்கும் போதெல்லாம் தினம் கூடும் தங்க விலையாய்த்தான் அவள் அழகு கூடி இருக்கும். ரியூசன் வகுப்பில் படிக்கும் போது நான் அவளையும்,அவள் என்னையையும் படிக்கும் வீதம்தான் கூடுதலாய் இருக்கும். அவள் புன்னகை சிந்தும் அழகிற்கு ஈடாக பூமியில் எதுவுமில்லை. நடக்கும் போதெல்லாம் அவள் பாதங்கள் மண்ணை முத்தமிட்டுக் கொண்டே போகும், அவ்வளவு மெதுமை,  வாரங்களும் , மாதங்களும் விரைந்தோடி காதலும் விருட்சமானது.
………….காதல் பண்ணி ஒரு வருடங்கள் கழிந்த பின்னும் இருவரும் வாய்விட்டுப் பேசவில்லை.அனைத்துமே எழுத்துக்கள்தான். அவள் கடிதங்களையும், கவிதைகளையும் படிப்பதற்கு ஒரு இரவு போதாது எனக்கு. படித்தபின்பு கற்பனையில் மிதற்ப்பேன். சின்னச் சின்ன கவிதைகளும் வடிப்பேன். எனக்கு ஆணித்தரமான ஆசை அவள் குரல் கேட்க வேண்டுமென்று, ஒரு நாள் அவள் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவள் ஒரு ஏழைப் பெண் என்பது அப்போதுதான் எனக்கு தெரிந்தது. அவள் வீட்டில் அவளைத் தவிர எல்லோரும் இருந்தார்கள். அவள் நண்பன் என உறவு சொல்லி திரும்பி வந்தேன், வரும் வழியில் என் தேவதை, வழியில் யாருடனும் பேசாதவள் என்னுடனும் பேசவில்லை. கண்களால் என்னை மீண்டும் அவள் வீட்டிற்கு அழைத்தாள்.  அவள் வீட்டிற்கு சென்று பேச்சுக் கொடுத்தேன்  கண்கலங்கியபடி பேசினாள் வார்த்தைகள் வரவில்லை. அவள் ஒரு ஊமைப் பெண் என்பதனால்.
…………காதலுக்கு ஊணம் ஒரு தடையில்லை, அவளைப் போலவே நானும் பேசினேன்.அவளோ வீட்டிற்கு ஒற்றைப்பெண்.செல்லப் பெண்.எங்கள் காதல் விவகாரம் அவள் வீட்டிற்கு தெரிந்தது, அடிக்கடி அவள் வீட்டிற்கு செல்வேன். ஒரு நாள் ரியூசனுக்குப் போயிருந்தேன் எங்கள் இருவருக்குமான தபால்காறி அவளின் நண்பி ஒரு கடிதத்தை தந்தாள். அவசரமாகப் படித்தேன் “ உடம்பு சரியில்லை அன்பே..! உடனே உன்னைப் பார்க்க வேண்டும் போல் உள்ளது. நளையும் என்னால் வரமுடியாது ”.என்று எழுதியிருந்தாள். எனக்கும் பார்க்க ஆசைதான் ஆனாலும் உடனே போய்ப் பார்க்க முடியாமல் போய்விட்டது. அவசர வேலையாக நான் நாளை பார்க்கலாம் என்று சென்று விட்டேன். அவள் ஒரு கிறிஸ்த்தவப் பெண் என்பதனால் அன்று  ஞாயிற்றுக் கிழமை நேரத்தோடு பார்க்க வேண்டும், அவளோடு தேவாலயம் செல்ல வேண்டும் என்ற ஆசைப்பட்டேன்.  ரியூசன் முடிந்து செல்வோம் என நினைத்தேன்.  அப்போது கடல்; நீர் வருவதாக கூச்சல் குரலெழுப்பிக் கொண்டு பெண்களும், குழந்தைகளும் ஓடினார்கள். என் உடம்பில் மின்சாரம் பாய்ந்ததுவாய் நான் திகைத்து நின்றேன். உடனே போய் பார்க்க முயன்றேன் நண்பர்கள் தடுத்து விட்டார்கள்.அவள் வீடும் கடற்கரைப் பக்கம்தான். மூன்று மணிநேரம் முடிந்த பின்புதான் அவள் வீட்டுப் பக்கம் போக முடிந்தது. என்ன அதிர்ச்சி அவள் வீடு இருந்த அடையாளமே கண்டு பிடிக்கமுடியவில்லை. அதற்கிடையில் திரும்பும் பக்கமெல்லாம் ஆயிரக்கணக்கான சடலங்கள்.கண் கொண்டு பார்க்க முடியவில்லை, என் கண்கள் எங்கையாவதும் அவள் உருவம் கிடக்கக் கூடாது என்று மனம் தடுமாறித் தடுமாறி அலைந்தது. இரண்டு மணி நேரம் கழிந்த பின்புதான் அவள் வீட்டுஅடையளத்தை நண்பர்களோடு கண்டு பிடித்தேன். ஆனாலும் எனக்கு நல்ல நம்பிக்கை அவள் எனக்காக உயிரோடு இருப்பாள் என்று. தேடித்தேடி களைத்த நான் சற்றே தலைதிருப்பினேன். ஒரு சடலம் அது அவளாக இருக்காது, நம்பிக்கையோடு சின்ன சந்தேகமும், அருகில் போய்ப் பார்த்தேன்.
…………நிர்வாணக் கோலத்தில் ஒரு இளம்பெண். அவசர அவசரமாக முகத்தைத் திருப்பிப் பார்த்தேன்.என்னால் பார்க்க முடியவில்லை. சிரித்த முகத்துடன் தலைமுடி முள்வேலியில் சிக்கியபடி என் தேவதை. கண்டவுடன் என் கண்கள் விறைத்துவிட்டது, கண்ணீர் வரவில்லை. அவளை சடலமாகவும் நிர்வாணக் கோலத்தில் யாரும் பார்க்க என் மனம் இடமளிக்கவில்லை. என் உடைகளால் அவளைப் போர்த்திக் கொண்டேன்.  அவள் கைகள் இறுக்கிப் பொத்திய படி இருந்தது. அதை விரித்துப் பார்த்தேன். செத்துப் பிழைத்தேன்,துடியாய்த் துடித்தேன்,தவியாய்த் தவித்தேன். மயங்கி விழுந்தேன். அவள் பொத்தி வைத்திருந்தது என்னுடைய படம். என்மீது அவள்வைத்திருந்த அளவற்ற பாசம் படத்தில் தெரிந்தது.என்னைப் பார்க்க ஆசையாய் உள்ளது எனக்கூறியும் நான் அவளைப் பார்க்கவில்லையே என்று அழுது புரண்டேன், என்ன  செய்ய முடியும் என்னால்?  இதுதான் தலைவிதியா? காதலிக்கு தீவைகும் கொடுமை.  அவளுக்கு தீவைக்கக் கூட எனக்கு மனமில்லை.  அந்த மல்லிகைப் பூ உடலுக்கு எப்படி தீவைப்பது?  மனம் கலங்கி தீவைத்தேன்.  ஆறாத காயங்கள் என் கண்ணுக்குள்ளே, கன்னியின் நினைவுகள் மட்டும் என் நெஞ்சிக்குள்ளே.  மறக்க முடியாமல் மனம் மாறடிக்கின்றது.  ஆத்திரம் கொண்ட சுனாமி ஏனோ அவளையும் அழைத்தது.  என்னை அழவிட்டுப் பார்க்கவா?  அழகான முகத்தை  அலைகடல் மிதிக்கவா?   தினம் அழுது அழுது அவள் நினைவுகளைச் சுமர்ந்து கொண்டு நடைப் பிணமாய் வாழ்கின்றேன். அடுத்த ஜென்மமாவது அவளோடு வாழவேண்டும் என்பதற்காக….இன்றும் உயிர்வாழ்கின்றேன் புயலில் சிக்கிய பூவாக.
………………………………………..…இதயபிரியன் ராஜூ…

 

 

 

.......................2).....விதியின் பயணம்ம்ம்………… ….*******************************************************


                                                                                         
…………நீண்ட தூரப் பயணத்தில்  இடை நடுவே தேவதை ஒருத்தி வழிமறித்தேறி  இருக்கையில்லாப் பேருந்தில் என்னருகில் வந்து நின்றாள். பாவையின் முகம் கண்டு பாவப்பட்டு இருக்கையைக் கொடுத்து எழுந்து நின்றேன். அந்த நொடியே பேச்சுக் கொடுத்த அவள்  நண்பி வீட்டுக் கல்யாண நெருக்கடியில்  என்னை மோதியது நினைவிருக்கின்றதா..?என்று கேட்டாள்.  தெரியவில்லை என மன்னிப்புக் கேட்டேன்.  தொடர்ந்து என்னைப் பற்றிக் கேட்ட அவள்  என் வறுமைக் கதை கேட்டு மனம் இழகி சில நிமிடங்கள் மௌனமனாள். மீண்டும் பேசிய அவள் என் தொலைபேசி எண்ணையும் வாங்கிக்கொண்டள்.
………….அடிக்கடி போன் செய்து அன்பாய் ஆறுதலாய் பேசி நண்பர்களய் மாறிக் கொண்டோம். அவள் மீது மரியாதையை தவிர காதல் மலரவில்லை. நட்பின் அடையாளம் தெரியாத சிலரின் கோணப் பார்வையால் எங்களுக்குள் காதல் செடி வளர்வதாய்  கதையொன்றைத் தொடுத்தார்கள். இதையறிந்து நான் அதனை அவளிடம் சொன்னபோது அவளும் சொன்னாள் நானும் கேள்விப்பட்டேன். அவர்கள் சொன்னதை நீயே சொல்லி இருந்தால் நான் மிகவும் சந்தோசப் பட்டிருப்பன். என்று சொல்லி தலைகுனிந்து கால்விரலால் தரையைத்தோண்டினாள். மாடி வீட்டுத்தேவதையை குடிசை வீட்டுக்கு எப்படி அழைப்பது. பதில் தெரியாமல் திணறினேன்.
………….அன்றாடம் உழைத்துச் சாப்பிடும் என் குடும்பத்துக்கு அவள் ஆறுதலாய் இருந்தாள். நானும் வெளிநாடு சென்று உழைக்க முயற்சிகள் செய்து கொண்டாள்.  எனக்கு பயணச்சீட்டும் வந்தது மின்னல் வேகத்தில்.  பயணிக்கும் நேரம் நெருங்க நெருங்க என் மூச்சிக் காற்று சூடேற ஆரம்பித்தது. அவள் கண்களில் குளமொன்று தேங்கியது.  பிரியமுடியாமல் தவியாய் தவித்தாள். நானும் அவளை ஆறுதல் படுத்த தனிமையில் அழைத்து பேசினேன். அவளோ என்னிடம் *வாராவாரம் கடிதம் அனுப்புங்கள், அவதானமாக வேலை செய்ய வேண்டும், தவறாமல் சாப்பிடுங்கள், ஓய்வுள்ளபோது படுத்து தூங்குங்கள், என்னை தனியாகதவிகக் விட்டு கனநாள் இருக்காமல் வந்து விடுங்கள்* என பலவற்றைக் கூறினாள்.  என்னால் எதையும் பேச முடியவில்லை. “ஏதாவது பேசண்டா செல்லம்” என என் நாடியைப் பிடித்து சொன்னாள். பிரிவு என்றும் நிரந்தரமில்லை. உன் வருகையைக் காத்து என் கழுத்து வெறுமையாக இருக்கும் நீ இடும் மாலைக்காக……கண்களில் நீர் கசிய சிரித்துக்கொண்டு பேசினாள். அக்கம் பக்கம் திரும்பிப் பார்த்து கட்டியணைத்து முத்த மழை பொழிந்து அணுப்பினாள்.
…………..கடல்நீரோடு என் கண்ணீரையும் கலந்துவிட்டு அரபு மண்ணில் கால்பதித்து கடமைகளையும் கன்னியமாய் முடித்து மூன்று வருடங்களுக்கு மூன்று மாதங்கள் இருகையில் நான் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வும் கிடைத்தது.  அளவில்லா மகிழ்ச்சி அப்போதே அவளிடம் இருந்து ஒரு மடல் *மருத்துவத்துறையில் பட்டமளிப்பு விழாவில் நான் எடுத்த படம் எப்படி இருக்கின்றேன் பாருங்கள்* என்ற அவள், நான் நலம் அதைவிட நீங்கள் நலமாய் வாழ  வேண்டும்.* என எழுதி இருந்தாள். அப்பொழுது எதுவும் புரியவில்லை எனக்கு. அடுத்த நாள் அடுக்கடுக்காய் அவசரசெய்திகள்(Fax) என் அலுவலகத்தில் குவிந்தது. * ஆபத்தான நிலையில் அண்ணி, உடனே வந்துவிடு அண்ணா..!* என்று தங்கையிடம் இருந்து வந்தது.
……………..அவசரஅவசராமாய் அவளைப் பார்க்க ஓடிவந்தேன். உயர்நிலை வைத்தியசாலையில் உயிருக்காகப் போராடி இருதய நோயால் அவதியுற்றுக் கொண்டிருந்தாள்.  அவசரப் பிரிவில் அறுவைச்சிகிச்சையும் பயனலிக்கவில்லை. பார்த்த உடனே பதறினேன். அவளின் பரிதாப நிலை கண்டு. மூச்சி விட முடியாமல் அவள் மார்புபை தூக்கித் தூக்கியடித்து மெத்தையில் அவதியுற்றாள். பார்த்தவுடனே என் மனம் பற்றி எரிந்தது. கண்களோ ஆறாகப் பாய்ந்தது. துடைத்தும் துடைக்காமலும் அவள் அருகில் சென்ற என்னை ஆசையாய் பார்த்தாள்.அந்தப் பார்வையிலே என் உயிர்தடுமாறியது.
………….என் மடிமீது தலைவைத்து என் கண்ணீரைத்துடைத்து ஏதோ பேச எத்தனித்தாள் அவளால் முடியவில்லை. என் கைகளைப் பிடித்து அழவேண்டாம் என்ற சைகைகாட்டி சிரித்தபடி மடிமீது உயிர்விட்டாள்.  என் கண்ணீரைத்துடைத்த அவள் கண்களைத்தான் என்னால் மூடி விட முடிந்தது.  கழுத்துக்கு மாலைகேட்டவளுக்கு மலர்வளையம் தான் வைக்கமுடிந்தது. கட்டி அழுது கதறினேன்.  உயிரோடு உள்ளபோது வந்து அவளோடு பேசவில்லையே, பார்க்கவில்லையே என்று துடித்தேன்.திரும்பும் திசையெல்லாம் அவளின் உருவம். அவள் நினைவுகள் என்னை வாட்டி வதைத்தது.  என்னால் முடியவில்லை மீண்டும் பயணித்தேன் அரபு நாட்டிற்கு. 
அன்பானவளின் ஆசையை நிறைவேற்ற முடியாமல், அவள் நினைவுகளை சுமந்து கொண்டு,  கண்ணீரில் மிதற்கின்றேன், பாலைவனத்தில் இன்று ஒரு பைத்தியக்காரனாக…..……………………….
………………………………….….இதயப்ரியன் ராஜூ…..
                                                                                                        
3) ....ஏன் பிறந்தேன் ஏழைப் பெண்ணாக....?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 
————-திகைத்துப் போய் நின்றேன் அந்த நொடியே..! முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள்.  பெண்ணின் முழுமையை அடைந்த சந்தோசம் ஒரு பக்கம், எப்படிக் கப்பாற்றுவது என்று இன்னொரு பக்கம் கவலை.  வயிற்றுப் புண் வலியோடு ஆசையாய் திரும்பி குழந்தைகளைப் பார்த்தேன், மீண்டும் ஒரு அதிர்ச்சி. இரண்டுமே பெண்குழந்தைகள். தலையை தடவி ஆசையாய் முத்தமிட்டேன். காக்கைக்கும் தன் குஞ்சி பொன்குஞ்சல்லவா..?  வறுமை வாட்டி வதைத்த வேளையிலே, என் செல்வங்களுக்கு உணவில்லை. பாசத்தையும், நேசத்தையும் ஊட்ட வேண்டிய தாய்ப் பாலும் என்னில் சுரக்க வில்லை. அழுவேன், துடிப்பேன் பசியால் வாடும் குழந்தை முகம் கண்டு. அடிமனம் கேழாது மார்புகளைக் கொடுப்பேன், பால்வராது என்று தெரிந்து பதறுவேன். பசியால் மார்புகளை கடித்து புண்ணாக்கும் என் பிஞ்சி மழலைகள்.புண் வலிதாங்க முடியாது பல்லைக்கடித்துக் கொண்டு மீண்டும் கொடுப்பேன். பெட்டிப் பால் வாங்க காசின்றி மல்லித்தண்ணீர் வடித்து குடிக்க கொடுப்பேன். கணவரின் ஒரு நாள் உழைப்பு ஒரு வேளை சாப்பிடக் முடியாது, அதிலும் மிச்சம் செய்வேன். அப்படியே ஓடியது இரண்டாண்டுகள்.
 
————–கணவருக்கு வேலை ஒன்று கிடைத்தது, அரிசி ஆலையில் மூட்டை சுமப்பதற்கு…, மாதம்  ஒரு முறைதான் வீடு வருவார். மிக்க மகிழ்ச்சியோடு பிள்ளைகளையும் கட்டி தழுவுவார். அளவில்லா ஆனந்தம் அடைவார். அவர் வருவதோ மாதக் கடைசி எனக்கோ மாதவிலக்கு காலம்.  இழுத்து விட்ட மூச்சிக் காற்றோடு இரண்டு நாள் தங்கி மீண்டும் செல்வார் வேலைக்கு. உழைத்து ஓடான என் கணவரைப் பார்க்கும் போது  என் மனம் பற்றி எரியும். நானும் உழைக்க விரும்பி வெளிநாடு செல்ல முடிவு செய்தேன். ஆரம்பத்தில் சம்மதிக்காத என் கணவர் காலப் போக்கில் சம்மதித்தார். இரண்டு குழந்தைகளையும், கணவரையும் பிரியும் போது  என்னால் முடியவில்லை, அழுது சிவந்த கண்களோடு அரபு நாட்டுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக வந்து சேர்ந்தேன்.


—————– அரபுவீட்டில் என்னை அன்பாகப் பர்த்தார்கள் வேலைகளையும் பகிர்ந்து தந்தார்கள்  பாசமாய் நடந்தார்கள் அந்தப் பாசத்துக்கு அர்த்தம் அப்போது புரியவில்லை. நாட்கள் நகரநகர வீட்டு எஜமானும் மகனும் என்னை ஏழனமாய்ப் பார்த்தார்கள். எனக்கு ஒரேஅச்சமாய் இருக்கும். ஒருநாள் பகல் வேளை எஜமானின் மகனின் 19 வயது வாலிபன் தனது படுக்கையறையை  துப்பரவு செய்ய  கட்டளையிட்டான்.  அந்த வேளை  அவனின் இளமையின் தாகம்  எனக்கு தெரிய வந்தது. அந்த வீட்டை விட்டு வெளியேற முயற்சி செய்தேன் விபரத்தைச் சொல்ல கணவருக்கு கடிதம் போட்டேன்,அவரிடம் இருந்து பதிலேதும் வரவில்லை. என்னாச்சோ..?ஏதாச்சோ..? என எனக்குள் வினா எழுப்பினேன். இருள் மூடிக்கொண்ட இரவெல்லாம் சிந்தையில் தவழ்ந்தேன். நாட்டில் சண்டையென்று செய்திகள் கேட்டேன். சோகத்தின் மேல் சோகங்கள் குவிந்து கொண்டே இருக்கும்  அந்த வேளையில் * உன்தங்கை வயதுக்கு  வந்து விட்டாள், சடங்கு செய்ய வசதியில்லை*  அம்மாவிடம் இருந்து பறந்து வந்தது செய்தி. தொடர்ந்து  அரபுவீட்டில் வேளை செய்ய வேண்டிய கட்டாயத்தில்  நான். காம வெறியர்களின் காம லீலைகளுக்கு ஆழானேன். ஒரு நாள் இரவு எனது வேலைகளை முடித்து என் உடம்பு வலியில் எனக்கென ஓரமாய் ஒதுக்கப் பட்ட அறையில் அயர்ந்து தூங்கிவிட்டேன்.  கதவினை அடைகக் மறந்து விட்டு.  அந்த நேரம் பார்த்து  புகுந்து கொண்ட காமவெறியன் என்னை சிதைத்து விட்டான். காலையில் எழுந்து அழுது கொண்டிருந்தேன் கண்களில் இருந்து
இரத்தம் மட்டுமே வடிந்து கொண்டு இருந்தது, கணவரை நினைக்கையிலே.


————— ஒருநாள் வீட்டில் எல்லோரும் வெளியில் போய்விட்டார்கள். நான் மட்டும் குளியலறையில், திடிரென்று வீட்டு எஜமான் வந்து விட்டார். நான் நினைக்காத ஒன்று அவரால், 50 வயது கிழவனும் மகனைப்போலவே நடந்து கொண்டார்.  வறுமைக்குப் பிறந்ததனால்  இப்படியொரு வாழ்க்கை.  நிலையைச் சொல்ல வீட்டிற்கு பேன் செய்தேன்.  என் மகள் தான் முதலில் பேசினாள். பேசப் பேச ஆசையாய் இருந்தது, அப்போதுதான்  கணவர் வந்தார். நான் பேச முதலிலே அவரே பேசிக்கொண்டிருந்தார். என்னால் உண்மையைச் சொல்ல முடியவில்லை, என் போனில் காசும் முடிந்தது.  இரவு பகலாய்  27 வயதில் இயந்திரமாக்கப் பட்டேன் அரபு வெறியர்களுக்கு.  ஓடியது  இரண்டு ஆண்டுகள் மீண்டும் தாயானேன். நாடு வரும் செய்தியை வீட்டுக்குச் சொல்ல  என்ன கொண்டு வருகின்றாய் எனக் கேட்டர் கணவர். ஒன்றரை( 1 1/2)  கொண்டு வருகின்றேன் என்றேன். சந்தோசப் பட்டார் உண்மை தெரியாது. விமான நிலையம் வரச்சொன்னேன்.அவரும் வந்தார் .  என்ன ஆச்சரியம் நம்ப முடியவில்லை என்னால். மயக்கம் போட்டு விழுந்தேன். எழுந்து பார்கையில் தலையெல்லாம் காயம் இரத்தம் வடிந்தது.  என்னை ஓடிவந்து தூக்கி விட முடியாத நிலையில் என் கணவர், இரண்டு கால்களையும் யுத்தத்தில் பறி கொடுத்து இருந்தார்.  நான் கொண்டு  வந்த ஒன்றரையில் , ஒன்று என் கழுத்தைப் பிடித்தபடி இடுப்பில், அரை(1/2) ஐந்து மாதக் கருவாக வயிற்றில் உதைத்துக் கொண்டு இருந்தது.  இரண்டைக் காப்பாற்ற வழியில்லை ,இப்போது நான்கா..? ஏக்க கேள்வியோடு கணவர் போகும் வழியிலே கவரிமான் போல் உயிர் விட்டார்.   உறவுகளோ என்னை வசை பாடியது, ஊரோ ஒதுக்கி வைத்தது,   தனி மரமாக்கப் பட்டு நான்கு குழந்தைகளையும் அநாதியற்று வளர்க்கின்றேன் இப்போது. ஏன் பிறந்தேன் ஏழைப் பெண்ணாக..? தினமும் செத்துச்செத்துப் பிழைக்கவா..?  செத்தபிணமாய் நடக்கவா..? புரியாமல் புலம்பிக்கொண்டு  தொடர்ந்து எழுதமுடியாமல்  எழுத்துக்கள் அழிகின்றது கண்ணீரில் ,  அழிய அழிய எழுதுகின்றேன் என் வாழ்வினை வரிவடிவில்……………

.
............................................................இதயப்ரியன் ராஜூ..............................
             .

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS