உண்மை உள்ளம்.


இன்றும் நினைவிருக்கின்றது
என்றோ ஒரு நாள்
அவள் பார்த்த பார்வை
முடியவில்லை என்னால்
மூடிக் கொண்டேன் கண்ணை
விடவில்லை பார்வை
துரத்தியது என்னை
இருவிழியும் கத்தி கொண்டு.

மதிமயங்கி நின்ற வேளை
காதோரம் வந்தது செய்தி.
உள்ளுக்குள் சிரித்தது
என் உணர்வினில் பாதி

உயிரினுள் ஊடறுத்து
இதயத்தில் பாய்விரித்தது
அவளின் முழுநிலாக் காதல்.

என்னையே நானறியாது
எங்கோ பார்த்து நிற்க
ஏப்பம் சொன்னது
இவள்தான் அவளென்று.
சட்டென்று மின் வெட்டு
எனக்குள்ளே தென்பட்டு
பகலொன்றை இருளாக்கி
ஒளிர்ந்தது அவள் விழிகள்.

விழிகளின் ஒளியில்
புலர்ந்தது எனதுலகம்,
தனிமையின் அருகில்
தவழ்ந்தது புது உலகம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS


                                                                                              - - காதலுக்கில்லை தாழ்மை நிலை - - 



யாரென்று தெரியாமல் 
தனியாக ஒருத்தி 
ஒற்றையடிப் பாதையிலே 
ஓயாது நடந்திருந்தாள். 

கிழியப் பட்ட ரவுக்கையில் 
மின்னும் முதுகு 
பின் வாங்கும் என் கண்கள் 
வெளிச்சத்தைக் கிழித்தது. 

பார்வை கீழிறங்கி 
பாதத்தைக் தொட 
பரிதாபம் என்ன சொல்ல்வேன் 
பாதணியும் அங்கில்லை. 

நெருப்பாய்க் கொதிக்கும் வெயில் 
நெருந்தி முள்ளுக் காடு 
நெருங்க முடியா வேகத்தில் 
நேர்த்தியானாள் அவள். 

எண்ணங்கள் வலை விரித்து 
வட்டமிட்டுச் செல்கையிலே 
மின்னல் வேகத்தில் 
சுடு மணலைக் கடந்து சென்றாள் 

சூடான என் இதயம் 
காதல் சுவடுகளைச் சுரண்ட 
துரத்தி மறித்தது ஆசை 
தூரே நின்று பார்த்ததினால்.  

வானத்திரை மறிக்கும் மேகமாய் 
வழி மறித்தேன் மானை 
நடுங்கி நின்றாள் 
நடை பாதையில் தானே 

வெழுத்த வெயிலில் 
வடியும் வெற்றிலைச் சாயம் 
தலை சுற்றும் வாசத்தோடு 
வாசகம் அவள் உரைத்தாள்.   

புரியாத பாசையில் 
ஏதோ புதிர் உரைக்க 
அறியாத மனசு 
அடம் பிடித்தது.  

நிலையான வாழ்க்கை 
அவள் நிழலாக மாற 
அவள் இதயம் 
எனக்குள் துடித்தது 

நடை பாதை பழகியது 
கால்கள் பாதனியை வெறுத்தது 
வறுமைக் கோட்டை 
வயிறு உணர்ந்தது. 

ஊர் வெறுத்தது 
உறவுகள் துரத்தியது 
வறுமை அழைத்தது 
வாழ்க்கை நகைத்தது.  

தாழ்த்தப் பட்ட சமுதாயத்தில் 
தலை புகுத்தப் பட்டேன் 
காதலிலும் 
வெற்றி அடையப் பட்டேன். 

பிச்சை உலகை விலகாது 
எச்சிலைக்காய் 
வெள்ளைத்துணியில் 
பிச்சைப் பாத்திரம் ஏந்துகின்றேன்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

40. உரிமையில்லா உறவு



இதுவரை ஒன்றும் புரியவில்லை
முகவரி எதுவும் அறியவில்லை,
முத்தம் வாங்கியதா கன்னங்கள்
முட்காடுகளும் சொல்ல வில்லை.

தெருவோர நாய்களின் சங்கீதம்,
காதில் பாயும் தேனாக
காட்டு வெளி ஈக்களெல்லாம்
வாயில் அமரும் தேளாக

கருவறையில் சுமர்ந்த தாய்
கல்லறைக்கு செல்ல முன்பு
சில்லறைக்குப் பெற்று என்னை
சாக்கடையில் போட்டாளா..?

கிணற்றில் வாழும் தவளையாய்
குப்பைத் தொட்டியில் என் வாழ்க்கை
குமுறி அழமுடியவில்லை
எச்சில் இலை என் வாயில்.

கண்கள் திறக்க முடிய வில்லை
உலகம் எதுவெனப் புரியவில்லை.
உயிரைக் கொண்டு வாழ்வதற்கு
உடம்பில் எனக்கும் தென்புமில்லை.

எறும்புக்கூட்டம் பாலுறுப்பில்
பருவம் பார்த்து மேய்கின்றது.
பாதி உயிர் என் உடம்பில்
பதுங்கிப் பதுங்கி வாழ்கின்றது.

இன்றோ நாளையோ ஆயுள்காலம்,
காய்ந்து போன வயிற்றுக்கு
உறவுகள் யாரென்று தெரியாமல்
வாழும் ஜீவன் நமக்கெதற்கு?

மாநகரக் குப்பை வண்டி
நாளையாவது வருமா? அறியவில்லை,
நான்கு மணி நேரம் தாங்காது,
உண்டு கொண்ட உணவுகள்.

இரக்கமில்லா மனித குலத்தில்
இறக்கி விட்ட இறைவா..!
ஈனப் பிறவி நானும்- உனக்கு
மறைமுக உறவா..?

மரணித்து வருகின்றேன் உன் பாதம்,
மகிழ்வாய் கொடுத்து விடு இன்றே சாபம்.



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

39. புன்னகையில் மலர்ந்த காதல்

கருவறையில் நிமிர்ந்த நான்
கருவிழியில் கவிழ்ந்து விட்டேன்,
கார்மேகக் கூந்தலிலும்
காதலையும் படர விட்டேன்.

தொலைந்து விட்டேன் நான்-உனக்குள்
தேடிப் பார் என்னை.
தொலைதூரம் செல்லவில்லை,
தொட்டிலிட்டுத் தாலாட்டு நினைவை.

தொப்புள்கொடி உறவில்
பிள்ளையாகப் பிறந்து விட்டேன்.
சொந்தம் ஒன்றைத் தேடிக் கொள்ள
நானும் உன்னை நாடிக் கொண்டேன்.

பகல்வேளை நிலவே..!
பவனி வரும் தேரே...!
நேசம் கொண்டேன் உன்னை,
ஏற்றுக்கொள்வாயா என்னை?

உனக்கு............

கண்ணதாசன் விட்டுச் சென்ற
கற்பனையைச் சேர்த்தெடுப்பேன்.
வைரமுத்து வாக்கியத்தில்
வகை வகையாய் பா உரைப்பேன்.



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

38. உயிர்வாழும் காதல்

பாலை வன வாழ்க்கையில்
பயணித்த எனக்கு
பருகக் கிடைத்த நீராக
கிடைத்தத(டி,டா) உன் காதல்.

பருகக் கிடைத்த நீரோ இன்று
பரந்து விரிந்து சமூத்திரமானது,

சமூத்திர வாழ்க்கையில்
ஓடும் நீராய் நான்.....
இடையில்
படகு விட்டு நீந்துகின்றாய் நீ.

ஆழக்கடலில் அலையடித்து
பூமிப் புயலும் எழுந்து வந்து
திசை திருப்புத( டி,டா )
உன் படகையும்,
என் வலையையும்.

அன்பே...!
படகும் வலையும் இணையுமா...?
நம் பாசம் மட்டும் குறையுமா..?
உன்னை விட்டு நான் வாழ்ந்தால்
உயிர்தான் உடலில் நிலைத்துவிடுமா....?



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

37.காதல் இல்லாப் பூமிவேண்டும்

நானும்,
காதலிக்க வேண்டுமென்று
கருவிலே தெரிந்திருந்தால்
தாய் மடியிலே சிதைந்திருப்பேன்,
யார் மனதையும் புண்படுத்தாது......

புரியாமல் தெரியாமல் பிறந்து விட்டேன்
பூமியில் காதல் கொடியதென்று.
அழுத கண்கள்
காதல் கதை பேசையிலே,
துடைத்த கைக்குட்டைகள்
இன்னும் ஈரம் உலரவில்லை.

இதயத்தில் இடம் கொடுத்தேன்
இரண்டாக கிழித்தது,
இமைகளில் இடம் கொடுத்தேன்
கண்களிலே குத்தியது.

காயங்கள் ஆறவில்லை
இன்னும் ஈக்கள் மொய்க்கின்றது.
காதல், புண்படுத்தி சென்றதனால்
புகையும் கண்களில் தைக்கின்றது.

போதை தந்த வழியில்- நான்
மறு ஜென்மம் தேடுகின்றேன்,
காதல் இல்லாப் பூமியினை.



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

36. சைகையாலே சாகடிக்கின்றாய்


உயிரின் உருவம் நீயடி
என் உயிரைத்திண்பது ஏனடி..?
மனதில் நின்றவள் நீயடி,
என் மனதைக் குடைவது ஏனடி...?

மஞ்சள் பூசிய முகத்தோடு
மங்கைப் பருவம் கொண்டவளே...!
மஞ்சம் கொண்டு ஏனடி,
மறைந்து நின்று பார்க்கின்றாய்..?

குறிப்புப் புத்தகமாய் இதயம் இருந்தால்
பக்கம் முழுவதும் உன் பெயர்தான்.
பேனா மையில் நிறம் தவிர்த்து
குருதி கொண்டு எழுதியிருப்பேன்.

குமரிப் பெண்ணே உந்தன் நிழலில்
றோஜா ஒன்றை வளர்த்திருப்பேன்,
பறக்கும் சடையில் பட்டம் விட்டு
பாவை உன்னை ரசித்திருப்பேன்.

புத்தி விழிம்பில் கத்தி வைத்து
பார்வையாலே கொல்கின்றாய்,
பாவாடை தாவணியில்
பளிச்சென்று மிளிர்கின்றாய்.

பட்டுப் போன இதயத்தை
தொட்டுத்தொட்டு உரசுகின்றாய்,
தொட்ட பின்பு நீயும் தான்
தொட்டாச்சிணுங்கி ஆகுகின்றாய்.

பார்வையாலே பசை பூசி
காதல் தீயை மூட்டி
பாறாங்கல்லாய் நீயும்
பாசமின்றி இருப்பதேனோ...?



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS