விழிநீர் வாசம்


 இறுதிக் கடிதம் கண்டவுடன்
இறுக்கி மூடிய கண்களுக்குள்

மெல்லக் கசியும் கண்ணீரை
ஒரு கரம் துடைக்க
மறு கரம் கொண்டு
வரைகின்றேன் மடலொன்று.

மறந்துவிடு என்று
முடித்துவிட்டாய் மடலை,
மறக்கும் வழி சொல்லாமல்
மணந்து கொண்டது எவனை..?( யாரை)

பக்கம் பக்கமாய் கவியெழுதி
பார்வையாலே கதை பேசி
உதடு தடவி உச்சரித்த வார்த்தைகள்
மிச்சமின்றிக் கேட்கின்றது.
அச்சமின்றிப் போனதனால்................
மார்பில் முகம் வைத்து - நீ
இழுத்து விட்ட மூச்சு
நெருந்தி முள்ளாய் ஆச்சு,
நெருப்பில் வெந்த புண்ணாக
இதயம் நொந்து போச்சு.

வார்த்தைக்கு நூறு முறை
கண்ணா எனச் சொல்லி
கன்னம் தொட்டு தடவி
கண்ணீரை மட்டும்
வரவழைத்து சென்றாயே..
ஊற்றெடுக்காது இறுக்கி
மேட்டு நிலமாய் காய்ந்து போன
என் கண்களுக்கு
அருவியாய்ப் பாயுதடி கண்ணீர் ஆறு.

மீசை வளராத வயதினிலே
காதல் வளர்த்த பாவத்துக்கு
பார்வையில்லா குருடரெல்லாம்
பைத்தியக் காரன் என்கின்றார்கள்.
பள்ளியறைக் காலத்திலே
பருவமாகாத வயதினிலே
பாசங்களைப் பகிர்ந்து கொண்ட
ஆசை முத்தங்களை மறந்தாயா..?

காதல் மட்டும் காயமில்லை,
நெஞ்சம் ஏனோ வலிக்கின்றது.
கண்ணீர் மட்டும் சோகமல்ல,
கண்கள் ஏனோ தவிக்கின்றது.
ஒன்றாகச் சேர்வோமென்று
ஓயாமல் பேசிவிட்டு
இரண்டாகப் பிரிந்து நீயும்
தாலி வேலி போட்டதேனடி..?

மனதில் குடியிருந்து மணம்முடித்து சென்றவளே..!
மண நாள் விழாவிற்கு என்னை மறந்துவிட்டாய் ஏனடி..?

முடியாத சிறுகதைக்கு முற்றுப் புள்ளிவைத்தாய்
முள்ளில்லா மலிகையின் முகத்தை நீயும் கிழித்துவிட்டாய்.

பெண்ணே..!
தொடர்ந்து எழுத முடியாமல்
எழுத்துக்களை அழிக்கின்றது
என் கண்ணீர் துளிகள்,
தொடர் கதையாய் எழுதுகின்றேன்
உன்னை நினைத்து சிறு கவி.......

மனம் வாழ்த்தி சொல்கின்றேன்
மணம் முடித்து சென்றாலும்
மகிழ்வாய் நீ வாழ்க......
நலமுடன் சேர்ந்து . குடும்பம் திகழ
நலமோடு நீ வாழ்க..........
 
...............இப்படிக்கு.............
நீ கைவிட்டுச் சென்ற உன் முன்னாள் காதலன், கண்ணீர் சிந்தும் விழிகளோடு என்றும்
......இதய ப்ரியன்.....

7)
 

 நினைவஞ்சலி
*******************

நினைவோடுதான் நிறுத்தி வைத்தேன் 
கனவோடு நீயும் கலைந்ததென்ன..? 

கண்களில் கலந்து 
காதலாய் புகுந்து 
மனதினில் வந்து மலர்ந்தவளே..! 
என்னன்பே..! 
வாழ்ந்த காலம் 
உன் நிழலோடு, 
கானல் நீராய்ப் போகுதடி, 
மீதிக்காலம் 
நினைவோடு வாழ்வதெப்படி..?
சொல்லுமடி...... 

என்னுயிரே...!
உன் மடிமீது தலைவைத்து 
நான் மடிய வரம் கேட்டேன்... 
நீயோ..
மார்பு மீது முகம்சாய்த்து 
நீ மடிந்த மாயமென்ன? 

கண்ணிமைக்காமல் உன்னைப் பார்த்தேன் 
காலன் வந்தது தெரியல்லியே... 
கடைசி வரையின்றி 
கைநழுவிப் போன 
மாயம்தான் புரியல்லியே... 

அன்பே..! 
உன்னைப் பிரிந்த என் விழிகள் 
மலையருவியாய் வடிகின்றது, 
மனதில் உந்தன் நினைவுகள் 
ஓயாமல் உதிக்கின்றது. 
பெண்ணே..! 
உயிரற்ற சடலம் 
உலாவருகின்றது உணர்விழந்து, 
உயிரிருந்தும் முடியவில்லையே 
உன்னை நானிழந்து. 

சந்தோசங்கள் குறைந்ததில்லை, 
சண்டையிட்டுப் பிரிந்ததில்லை, 
சந்தேக வாழ்க்கைக்கு 
சட்சியாக வாழ்ந்ததில்லை. 
பிரியமாய் இருந்தவளே..!
பிரிந்து நீ சென்றதினால் 
பிஞ்சி மனம் 
பற்றி எரிகின்றது. 

தேடி வருவதற்கு 
முகவரி தெரியவில்லை, 
தெருவோர நாயாக 
தினமும் உலா வருகின்றேன். 
தனித்து வாழ முடியவில்லை, 
தனிமைப் படுத்தி சென்று விட்டாய், 
நீ தந்த சுகத்தோடு 
தனியாகப் புலம்ப விட்டாய். 

நானோ புலம்பியபடி வாழ்கின்றேன்........ 

***மரணம் வந்தாலும் 
மறக்காத மனம் வேண்டும் 
மீண்டும் ஜெனனமென்றால் 
நீயே என் 
மனைவியாக வரவேண்டும்*** 
ஓம் சாந்தி...! சாந்தி...!! சாந்தி...!!!

உன் ஆத்மா சாந்திக்காக இறைவனைப் பிராத்திக்கும் கண்ணீர் சிந்தும் காவியங்களோடு , நினைவுகளைச் சுமந்தபடி கனவுகளோடு நீந்தும் உன் காதலன் ..................“இதய ப்ரியன் ”
 6)
விண்ணைத்தாண்டி இன்று
விளையாட வந்தவளே..!
என்னைத்தாண்டி ஏனடி
வெகுதூரம் செல்கின்றாய்..?

பூஞ்சோலைக் காற்று
புழுதியைக் கிழப்பியதாய்
கண் திறந்து காத்திருக்க
மண்தூவிச் செல்கின்றாயே..!

வேண்டும் என வந்த நீ
வேண்டாம் எனச் செல்வதென்ன..?
சுழிக்காற்றாய் நீயும்
முகம் சுழித்துப் போவதென்ன..?

பெண்ணே...!
அந்தி சாயும் வேளையிலே
சங்கமித்த உன் நினைவுகளுக்காய்
சங்கமொன்று சேர்ந்ததடி...
சந்தோசங்கள் இன்றி
சல்லடையாய் கிழிந்தடி....

பன்னாடையாய் நான்..............
பயன் ஒன்றுமில்லையாடி,
பாவாடை தாவணியோ
பல தூரம் பறந்த பின்பு

கனவுகளைக் கூட்டி
நினைவுகளில் மிதக்கின்றேன்,
கைவிட்டு போனவளே..!
உன் காதல் பொய்யானதா..?
கனவுகள் மேகத்துக்குள் மறைகின்றதே....
காலங்கள் கடக்கையிலே
காயங்கள் வலிக்கின்றதே.......

புரிந்து கொள்வாய் என்றுதான் 
பிரிந்து சென்றேன், 
பாலை வானக் குயிலாய் - நீ 
பருதவிப்பாய் என அறியாமல். 

நீயும், நானும் எதிரெதிர் திசையில் 
ஏங்கியெங்கித் தவிக்கையிலே 
நினைவுகள் இடையிடையே 
கனவுகள் வந்து மறைக்கின்றதே.... 

நீயோ..............! 
தாடிவைத்துக் காட்டுகின்றாய் 
உன் சோகத்தை,... 
மூடிவைத்து தவிக்கின்றேன் 
எனது தாக்கத்தை... 

விலக்கிச் சென்ற என் காதலனே..! 
கட்டிய கணவனோடு 
கட்டிலறை சென்றாலும் 
ஊஞ்சல் கட்டியாடுதடா 
உன் நினைவு. 

மழைக்கு முன் வந்து 
நிலையில்லாது போகும் 
வானவில்லாய் அல்ல என் காதல். 
நிலையாய் இருக்கும் வானம் போன்றது. 

உன்னை மறக்க முடியாமல் 
நான் தவிப்பதை உணர்வாயா...? 
மனதுக்குள் சிறையிருக்கும் 
உன் நினைவைத்தான் அறிவாயா..? 

பெண்ணுக்கும் உண்டடா 
புண்ணாகும் இதயம் 
புகைவிட்டு ஆற்றத்தான் 
முடியாது எதையும். 

உறவுகள் கொடுத்தது 
காதலுக்கு தூக்கு கயிறு 
தினம்தினம் போகின்றது 
உன் நினைவுகளில் என் உயிரு( உயிர்) 

உன்னை விட்டு மணந்து விட்டேன் 
மன்னித்துவிடு என்னை 
மறக்க முடியாத காதலனே..! 
மணந்து விடு நீயொரு பெண்ணை..............
4)


அன்பாய் இருந்தவளே..!
அழையாமல் சென்றதேனடி..?
என் வாழ்கையை தொடங்கியவளே....!
உன் வாழ்கையை முடித்ததேனடி... ?
சொல்லாமல் சென்றயே
‍உன் நினைவுகளை குவித்து விட்டு....
சுமக்க முடியாது நெஞ்சம் துடிக்கின்றது.
தாங்க முடியாமல் தவியாய் தவிக்கின்றது.
விடிந்த போதும் என் வாழ்க்கை
இருட்டி இருக்கின்றது
அன்பே உன்னைக் காணாது...
தூங்க முடியவில்லை தூரே நீ சென்றதனால்
அன்பே..!
முடிந்தால் தபாலிடு
நம் காதல் முகவரிக்கு
வாழ்க்கையின் கடைசிப் பக்கத்தை
பதிலாய் அனுப்புகின்றேன்.
பாசம் நிறைந்த படர் கொடியே..!
நேசம் வைத்த நினைவலையே...
நம் காதலை விட்டு விட்டு ‍ ஏன்..?
காலன் உன்னைக் கைது தான்,
எத்தனை நாள் தண்டணையடி
உன்னைப் பிரியவைத்து
வாழ் நாளில் எனக்கு...........
****************
என்றும் உன் நினைவலைகளுடன்.
உன் காதலன்
நான்..............இதயப்ரியன்

3)


ஏன்..?
அமைதியைத் தேடினாய்..
அநாதையாய் என்னை அலையவிட்டு,
காதலை பெற்றோர் சம்மதிக்க
காலன் ஏனடா?
உன்னைப் பிரித்து சென்றான்...
வாழ்க்கையே வெறுக்கின்றது
என் வாலிபம் உள்ள வரையில்
உன் மடியில் நான் மடிய நினைத்தேன்.
நீயோ...!
உன் வாழ்வினை முடித்து விட்டாய்,
இனி யார் மடியில் நான் மடிவேன்..?
நினைவுகள் உள்ள வரை.......
கடந்த காலம் வைத்து
எதிர் காலம் சொன்னவனே..!
நிகழ்காலம் இருண்டதை
ஏன் சொல்லவில்லை...?
கறுப்பு,வெள்ளை என் நிழல்ப்படத்துக்கு
கலர் கொடுத்து விட்டு - என்
வாழ்க்கையை ஏனடா இருளாக்கிச் சென்றாய்..?
கனவா.? நிஜமா..?
தெரியாது திண்டாடும் எனக்கு
வெந்த புண்ணில் வேல் பாய்கின்றது
சந்தித்த நேரத்தை
கடிகாரம் காட்டையிலே,
நடந்த பாதைகள் சொல்கின்றது
நடந்தவை அனைத்தையும்...........

2)

விழிமோதி நானும்
மடிமீது சாய,
விழி கலங்கி என்னை
விஸ்த்தரித்துக் கொண்டவளே..!
சொல்லாமல் சென்று
கொல்லாமல் கொல்கின்றாய்
நினைவாக வந்து
பொடியாக அரிக்கின்றாய்,
நீல நிற வானுக்குள்
நீண்டதொரு பயணம்,
விழித்தபடி கண்களுக்கு
ஏது ?இங்கு சயணம்.
விலகியிருக்கையில்
வெண்ணிலவு தூரமடி,
பக்கம் நின்று பேசையிலே
பால் நிலவு சொந்தமடி,
பிரியப் பட்டு வந்தவளே..!
பிரிந்து நீ செல்வதினால்
பிளவான மனதோடு
புலம்புதடி ஓர் உயிரு..
காரணம் சொல்வாயா கண்ணிருக்கு..?
கருமணிகள் கலைந்த கண்களுக்கு........
 
                                                                              1)

                                                                  
பூத்திருந்து கண்கள்
புண்ணாகப் நோகின்றது,
மூச்சிவிடும் தென்றல்
முள்ளாகத்தைக்கின்றது,
துணையில்லா நெஞ்சம்
தவியாய் தவிக்கின்றது.......

நீயோ..!
காத்திருக்க சொல்லி.
காற்றோடு போனாயா..?
உன் மூச்சோடு நானும்
மூச்சற்று வாழ்கின்றேன்.
........................................................இதயப்ரியன் ராஜூ...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS