தூறல்கள்



45.எங்கே சென்றாய் என்னைவிட்டு,
  இதயம் துடிக்கிறது உன்னைக்கேட்டு.



44.என்னைத் தெரியாதெனச் சொன்னவளே..
எல்லோருக்கும் என்னைத் தெரியப் படுத்திய தேனடி...?
 

43.உன் கஞ்சத்தனத்தைப் புரிந்து கொண்டேன்,
தினம் ஒரு முத்தம் தரும் போதுதான்.

42.பெண்ணே..!
தொட்டுத்தொட்டுப் பேசிவிட்டு ஏன்
வெட்டி விட்டுச் செல்கின்றாய்..?

41. நீ கட்டியணைத்துக் கொடுத்த முத்தம்
கனவிலும் உன்னை நினைவு படுத்துதடி....

40. பெண்ணே..!
நிமிடம் ஒரு முறை விடிகின்றது,
என்னருகில் நீ இல்லாத போது...

39. இணைந்திருந்த இரவுகளை மறந்து சென்றவளே..!
இரவின் நீளத்தை ஏனடி புரியவைத்தாய்....?

38. இருட்டில் தேடுகின்றேன் என் இதயத்தை
திருடிச் சென்றவளே திருப்பிக் கொடுத்துவிடு
என்காதல்போல் வாழ்க்கையும் இருளமுன்பு.

37. கண்ணாடி முன் நிமிடங்களாய் பார்க்கும் போது
வேதனை தெரிவதில்லை..
ஆனால்,
சந்திக்கும் நேரம்மதை சிந்திக்கும் போது
மனம் தாங்கத்தான் முடிய வில்லை...

36. தனிமையில் இருந்து
கவலையை வளர்த்து
கண்ணீருடன் கலந்த காதல்
கரையேறுமா..?
இல்லை
கறை படியுமா..?

35. ஊமை நெஞ்சங்கள்
உறவாடும் வேளை
உறவாடும் நெஞ்சங்கள்
உறங்கி விடும் அதைப் பார்த்து.

34. கடற்கரை மண்ணில்
தினம் கற்பனையை பதித்ததாய்
பறி போனது என் காதல்
அரித்துப் போன மணலாய்.


33. மொழிகள் அனைத்தையும் புரிந்து கொண்டேன்
நீ
தோழியாய் இருந்து பேசும் போது.....
மொழிகள் மறந்து தவிக்கின்றேன்
காதலியாய் வந்து மௌனமொழி பேசும் போது...

32. நாம் சேர்ந்து நட்ட ரோஜாசெடி
பூத்துச் சிரிக்குது முற்றத்திலே,
நட்ட நீ சூடிக் கொள்ள மறுப்பதேனோ..?

31. மழைக்கு முன் நிற்கும் வானவில்லாய்
நிலையில்லாமல் போனது என் காதல்.

30. இரக்கமற்றுப் போனவளே..!
ஏனடி....?
இரவையும் திருடிச் சென்றாய்...


29. என்றும்...
உன் அன்பு வேண்டும்,
இன்னொருஜென்மம்
நான் வாழ...
இன்றே அது வேண்டும்
உன்னோடு உறவாட,
உயிரோடு உலவாட.....

28. வாழ்வோடு போராட்டம்
உன்னோடு சேரத்தான்,
வாலிபத்தின் தின்டாட்டம்
 நினைவோடு வாழத்தான்....

27. உதிரம் சொட்டும் வரை
உயிர்க் காதல் வாழும்,
உன்னை அடையும் வரை
என் மூச்சி நீளும்....

26. உதிரம் சொட்டும் வரை
உயிர்க் காதல் வாழும்,
உன்னை அடையும் வரை
 என் மூச்சி நீளும்...

25. உனக்காக வாழ்கின்றேன்
உயிர் மூச்சி வாங்குகின்றேன்
உள்ளத்தில் குடி வைத்து
தீபம் ஒன்று ஏற்றுகின்றேன்....


24. ஒரு ஜென்மம் போதாது,
என் ஆசைகள் தீரத்தான்.
அன்பே...!
வந்துவிடு
மறு ஜென்மம் வாழத்தான்.

23. என்னைக் கேட்கமல் மனம்
உன்னை நினைக்கின்றது
கண்கள் அறியாமல்
பார்வை தொடுக்கின்றது,
உன்னைக் கேட்டுத்தான்
இதயம் துடிக்கின்றது.
என்னை வெறுத்துத்தான்
இரவும் சுருங்கின்றது.


22. கோடி மின்னல் சேர்ந்ததாய்
ஓர் உருவம்
பொன் நிற‌த்தில்
பொண்ணான ஓவியமாய் -நீ
தங்கத்தை அரைத்து
அங்கம் செய்து
தரைக்கு அனுப்பினானா...?
நன்றி சொல்கின்றேன் பிரமனுக்கு.

21. உன் தேகம் தீண்டிய தென்றல்
என் உடலை உரசிய போகையிலே
நெஞ்சிக்குள் வந்து
தேன் மாரி பொழியுதடி....

20. உன் கூந்தல் அசைவில்
பெருத்த தென்றல்
வம்புக்கு இழுக்குதடி,
ஈரக் காற்று அன்பாய் வந்து
என்னைத் தழுவுதடி.

19. உன் பூ முகம் காண
மீண்டும் ஜனனிப்பேன்,
பூக்களாய் மலர்ந்தாலும்
மாலையிட நான் வருவேன்,
தாமரைப்பூ தடாகத்தில் விட்டு
தாலியையும் கட்டிடுவேன்,
தாமரையிலையில் தண்ணீராய்
உனக்குள்ளே தடம் புரல்வேன்.

18. பிறந்து விட்டாய் பெண்ணாக..
பூமியிலே எனக்காக,
செவ்விதழ் வாயோடு,
செதுக்கி வைத்த சிலையாக,
சிற்பமா..? சித்திரமா..?
நீ..........
சித்தரிக்கும் காவியமா..?
கண்டு கண்டு ரசிக்கின்றேன்,
 காலத்தை ஜெயிக்கின்றேன்....

17. காற்றிலேறிக் காதலிப்போம்
கடல் நீரில் முக்குழிப்போம்,
காவியங்களை வெல்ல
கண்களினால் சங்கரிப்போம்
சந்தோச தேரேறி
உலாவிடுவோம் உயிரிணைந்து..

16. பூஞ்சோலைக் காற்று
புன்னகைத்து சிரிக்கும்,
பெண்ணே.! உந்தன்,
பூமுகம் கண்டு,
மெல்லத்தழுவும் தென்றல்
தேகம் சிலுக்கும்
உன் கூந்தல் நடனம் கண்டு..

15. ஆகாயத்தென்றலே நீ எங்கே..?
உனக்காய் வாழும் ஜீவன் நானிங்கே....
உயிரின் ஒலியாய் இசைக்கும் வீணையே....!
தலை நீட்டி ஏற்றுவிடு என்னை...

14. தூங்குகின்றது உன் நினைவு,
என் தூக்கத்தை கெடுத்து விட்டு...

13. ஊமையாய் இருந்த என் கண்களுக்கு
பேசக் கற்று கொடுத்தவளே...!
பசியால் துடித்த என் கண்களுக்கு,
விருந்து வைத்தவள் நீயல்லவா..!

12. எனக்குள் உன் இதயம் துடிக்கும் வரை
மரணம் உன்னைத் தீண்டாது..

11. மல்லிகை மலராய்
கண்களில் மலர்ந்தவளே..!
வீரப்பன் விட்டுவைத்த
சந்தணக்கட்டையாய்
நறுமணம் வீசுகின்றாய்
என் காதல் மனதுக்குள்ளே..!


10. தனிமையிலே இனிமை தேடுகின்றேன்,
கண்ணே உன்னைக் காணாதபோது....

9. நீ...
கட்டியணைத்துக் கொடுத்த முத்தம்,
கனவிலும் உன்னை நினைவு படுத்துதடி..

8. உலகம் தெரியாதபோது
உன்னைத்தான் உலகமென நம்பினேன்...
என்னை உருட்டி விட்டு சென்றாயே...!

7. தொலைவில் உள்ள போது
தொலைபேசியில் பேசுவதும்,
கண்ணில்லாத குருடன்
எதிரில் இருந்து பேசுவதும் ஒன்றுதான்.

6.நாம் பறக்க வேண்டுமென்று
இறக்கைகள் கேட்டேன்.
நான் இறக்க வேண்டுமென்றா..?
இன்னொருத்தனோடு நீ சென்றாய்....

5. என் இதயத்தில் இருக்கை போட்டேன்
உன்னை அதில் அமரச்செய்ய..
நீயோ அமைதியாய் சென்றதென்ன...?

4. பெண்ணே..!
உன்னைத் தொட்டுப் பேசாததாலா
என்னை விட்டுப் போகின்றாய்.....?

3. ஒரு பெண்ணை வைத்துப் பூட்டிய
என் இதயக் கதவை ஏன்..?
தட்டித் தட்டிப் பார்க்கின்றாய்...நீ நுழைவதற்கு.

2. தூங்குகின்றது உன் நினைவு
என் தூக்கதை கெடுத்துவிட்டு...

1. பெண்ணே...!
கற்பனை மிகுந்த காவியம்- நீ,
பிரமன் தீட்டிய ஓவியம்-நீ......


                                                                             
 எனது தூறல் பகுதியில் நான் தூவிய கவிகளைப் படித்த கவியுள்ளங்களுக்கு என் கனிவு கலந்த நன்றிகள். .. என்றும் இதயப்ரியன் ராஜூ.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS