36. சைகையாலே சாகடிக்கின்றாய்


உயிரின் உருவம் நீயடி
என் உயிரைத்திண்பது ஏனடி..?
மனதில் நின்றவள் நீயடி,
என் மனதைக் குடைவது ஏனடி...?

மஞ்சள் பூசிய முகத்தோடு
மங்கைப் பருவம் கொண்டவளே...!
மஞ்சம் கொண்டு ஏனடி,
மறைந்து நின்று பார்க்கின்றாய்..?

குறிப்புப் புத்தகமாய் இதயம் இருந்தால்
பக்கம் முழுவதும் உன் பெயர்தான்.
பேனா மையில் நிறம் தவிர்த்து
குருதி கொண்டு எழுதியிருப்பேன்.

குமரிப் பெண்ணே உந்தன் நிழலில்
றோஜா ஒன்றை வளர்த்திருப்பேன்,
பறக்கும் சடையில் பட்டம் விட்டு
பாவை உன்னை ரசித்திருப்பேன்.

புத்தி விழிம்பில் கத்தி வைத்து
பார்வையாலே கொல்கின்றாய்,
பாவாடை தாவணியில்
பளிச்சென்று மிளிர்கின்றாய்.

பட்டுப் போன இதயத்தை
தொட்டுத்தொட்டு உரசுகின்றாய்,
தொட்ட பின்பு நீயும் தான்
தொட்டாச்சிணுங்கி ஆகுகின்றாய்.

பார்வையாலே பசை பூசி
காதல் தீயை மூட்டி
பாறாங்கல்லாய் நீயும்
பாசமின்றி இருப்பதேனோ...?



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS