11. நீ வேண்டும்

என் மனம் ஏனோ,
உன்னை எண்ணித் துடிக்கின்றது.
கண்கள் இரண்டும் இப்போ
உன்னைக் காணத் தவிக்கின்றது.

முடியாது என்று சொல்லி
முட்டுகின்ற மனசிக்குள்ளே..!
கிடையாது என்று சொல்லி
கற்பனைகள் அலைகின்றது.

கரம் பிடிக்க நினைக்கையிலே
கையிரண்டும் வலிக்கின்றது
மாலையிட நினைக்கையிலே
மார்புக்குள்ளே உதைக்கின்றது.

அக்கம் பக்கம் பார்க்கின்றேன்
பக்கம் வந்து தூங்குகின்றாய்
படுக்கையறை செல்கையிலே
என் பாதியுயிர் போகின்றதே..

அன்பே..!
மீதி உயிர் வாழவேண்டும்,
உன் மடி மீது சாய வேண்டும்,
காலை நேரப் பொழுதாக
கண்களுக்கு காட்சிகொடு,
காலமெல்லாம் காத்திருக்க,....
காதலோடு பூத்திருக்க.....


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS