9. றோஜா மலர்

உன் உதடொன்ற றோஜா மலரிலே
முத்தமிட்டு வந்த வண்டு நான்.,
மீண்டுமொரு முறை
என் றோஜாவில் முட்டும் போது
இதழில் இன்பம் பொங்குமா..?
உதட்டில் முள்ளுக் குத்துமா..?

சோகம்தான் என்னுள்ளே,
முள்ளுள்ள மரத்தில்
றோஜாச் செடி இருப்பதை எண்ணி.....

பெண்ணே..!
இணைந்து நட்ட றோஜாச் செடி
மலர்வதெப்போ..?
நாம் மகிழ்வதெப்போ..?

நட்ட செடி மலரமுன்பு
மாற்றான் மனைவியாக நீ சென்றாலும்
முற்றத்தில் விட்டுச் செல்
காதல் செடியை
என் முகத்தில் முற்கள் கீறட்டும்.
ஏன்...?
முட்டாள் தனமாக
முள்ளுள்ள மரத்தில் மலர்ந்த மலரை
காதல் கொண்டதற்காய்.....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS