2.காதல்


காதல் ஒன்றும் பரீட்சையல்ல
காகிதத்தில் எழுதிச் சொல்ல,
கண்களின் உரையாடல்
மொழியொன்றும் தேவையில்ல,

இமைகளின் அசைவில்
புகுந்திடும் காதல்
இடைவெளியின்றி
தொடர்ந்திடும் மோதல்.

ஆயிரம் கோடி ஆசைகள்
ஆன்மாவில் ஊறும்,
அன்பின் பெருக்கம்
அருவியாய்ப் பாயும்,

இதயத்தின் துள்ளல்
இணைவினைச் சொல்லும்
விநாடிகள் வந்து
உணர்வுகள் ஊறும்,

விளக்கமின்றி
உதடுகள் விரியும்.
விடிவினைக் கண்கள்
விரைவாய் அழைக்கும்,

காதலன் முகம் காண
ஆசைகள் பறக்கும்
விழித்துக் கொண்டே
கனவுகள் மிதற்கும்,

காதல் உள்ளம்
அத்தனையையும் வெல்லும் ,
ஆழ்கடல் தொலைவில்
ஆன்மாக்கள் உலாவும்......


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS