13. நானும் ஒரு அநாதை.


பசித்தவுடன் அழுதேன்,
வலித்தவுடன் அழைத்தேன்,
வரவில்லை யாரும்...
அம்மா..!
நீ எங்கே..?

குடல்கள் சுருண்டு
பசியோ கிள்ள
தள்ளாடும் கால்களோடு
மெல்லாடும் எனக்கு
கரம் கொடுக்க யாருமில்லை.

பெற்றவர்களுக்கு நானும்
பிள்ளையா..? தொல்லையா..?
அறியவில்லையே....

ஆயிரம் தடவை
அம்மா என அழைத்தேன்,
என்னை அணைப்பதற்கு
யாரும் வரவில்லையே.....!

அழுது அழுது
தொண்டை நீர் வற்றியும்
மார்புப் பால் குடிக்கவில்லை.
என்னைப் பெற்ற மகராசி
எங்கே என்றது தெரியவில்லை.

தெருவில் செல்வோன்
காறித்துப்ப
தெரு நாய்கள்
கூடிக் குரைக்க,
கை தட்டி சிரிகின்றேன்
இதுதான் வாழ்க்கையாவென்று...

குப்பைத் தொட்டிக்குள்
எச்சில் உணவு...

இப்பொழுதுதான் புரிகின்றது
நானும் ஒரு அநாதையென்று......................



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS