மறந்து விட்டேன்
என் கவிதைகளின் தொகைகளை,
ஏதோ எழுதுகின்றேன்
கவியாகின்றது,
உன் நினைவுமட்டும்
உயிராகின்றது.
பென் பிடித்து கிறுக்குகையிலே,
புரியாத பாசையும்
புலனாகின்றது,
பெண்ணே..!
உன்முகம் ஒளியாகின்றது.
கோடிக் கவிதைகள்
எழுதிக் குவித்தும்
கடைசிக் கவிதையை
மறந்து விட்டேன்,
முதல் கவிதையை
மனதுக்குள்ளே
புதைத்துவிட்டேன்.
உன் பெயரைத்தான்
முதலில் நான் கருவுற்றேன்,
அதுதான் இன்று
நிலைபெற்றது.
ஒற்றைச் சொல்லில்
எழுதுகின்றேன் கவிதை
அத்தனையும் உன் பெயராகத்தான்,
அதுதான்
என் முதல்கவிதையும்
அறிவாயா கண்ணே..!
என் கவிதைகளின் தொகைகளை,
ஏதோ எழுதுகின்றேன்
கவியாகின்றது,
உன் நினைவுமட்டும்
உயிராகின்றது.
பென் பிடித்து கிறுக்குகையிலே,
புரியாத பாசையும்
புலனாகின்றது,
பெண்ணே..!
உன்முகம் ஒளியாகின்றது.
கோடிக் கவிதைகள்
எழுதிக் குவித்தும்
கடைசிக் கவிதையை
மறந்து விட்டேன்,
முதல் கவிதையை
மனதுக்குள்ளே
புதைத்துவிட்டேன்.
உன் பெயரைத்தான்
முதலில் நான் கருவுற்றேன்,
அதுதான் இன்று
நிலைபெற்றது.
ஒற்றைச் சொல்லில்
எழுதுகின்றேன் கவிதை
அத்தனையும் உன் பெயராகத்தான்,
அதுதான்
என் முதல்கவிதையும்
அறிவாயா கண்ணே..!







