17. கொவ்வையிதழ்

கொவ்வைப் பழ இதழோடு -நான்
கோவ வந்த மாதுளையே..!
இளந்தப் பழ நிறம் கொண்டு
சிவந்து ஏனோ சிரிக்கின்றாய்...?

ஒல்லி இதழ் தாமரையே..!
அல்லி மகள் தேவதையே..!
பூவை ஏந்தும் பாவையாய்
பார்வை காட்டும் புன்னகையே..!

நாணத்தால் நான் குனிந்து
வானவில்லாய் வலையுண்டு
திறவாத உதட்டோடு
மனம் திறந்து பேசுகின்றேன்.

மெல்லத் தவழும் தென்றலிலே
அலையாய் மோதும் ஆசைகளில்
சத்தமில்லாமல் முத்தமொன்றை
ரகசியமாய் அனுபுகின்றேன்.

பிடித்திருந்தால் அணைத்துவிடு
வெறுத்துவிட்டால் துரத்திவிடு,
வெட்கப்பட்டால் குனிந்து விடு
வேதனையின்றி விலகிவிடு.......

நான் புரிந்து கொள்வேன்.
அந்த அர்த்தத்தினை........


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS