உனக்காய் விழித்து
சிவந்த கண்களில்
தண்ணீர் வற்றிப் போனதடா..
உப்பு நீரும் உறைந்து கொண்டு
இரத்தக் கண்ணீர் வடியுதடா...
சிவந்த கண்களில்
தண்ணீர் வற்றிப் போனதடா..
உப்பு நீரும் உறைந்து கொண்டு
இரத்தக் கண்ணீர் வடியுதடா...
இரவுப் பொழுது விடிய முன்பே,
இரக்கமின்றிப் போனாயா..?
இயந்திரத்தில் இதயம் கொண்டு
மனிதனாகப் பிறந்தாயா..?
கைவிட்டுச் சென்றவனே..!
என் காதல் கசிந்து
விழியால் குருதி வடிகையிலும்
பாழ்பட்ட எந்தன் மனம்
பாவியுன்னைத் தேடுதடா..................
இரக்கமின்றிப் போனாயா..?
இயந்திரத்தில் இதயம் கொண்டு
மனிதனாகப் பிறந்தாயா..?
கைவிட்டுச் சென்றவனே..!
என் காதல் கசிந்து
விழியால் குருதி வடிகையிலும்
பாழ்பட்ட எந்தன் மனம்
பாவியுன்னைத் தேடுதடா..................







