22.புரியாத புன்னகைதான் நீ...


ஒற்றவார்த்தை சொல்லி நீயும்
உயிரைக் கசக்கிப் பிளிந்து விட்டாய்
ஓயாமல் பேசிப் பேசி
தூக்கத்தையும் கெடுத்து விட்டாய்.

பருந்து வட்டம் போடுவதாய்
முகம் காண அலைகையிலே
கோழிக்குஞ்சாய் நீயும்
ஓடிஓடி ஒழிவதென்ன..?

வானத்து நிலவாய் உன்னைத்
தொட்டுப் பார்க்க ஆசைகொண்டேன்.
சுட்டெரிக்கும் சூரியனாய்
வெட்டி வெட்டிப் பார்பதென்ன..?

விருப்பம் சொல்லும் வேளையெல்லாம்
வெறுப்புக் காட்டி போபவளே..!
கறுத்த முகம் பிடிக்கவில்லையா..?
வெள்ளை மனம் தெரிய வில்லையா?

ஏழை மகன் என்று நீயும்
எடுத்தெறிந்து போகின்றாயே..!
விம்மியழும் இதயத்துக்கு
வெண்ணீர் ஊற்றிப் பார்க்கிறாயா..?

அத்தனை கேள்விகளுக்கும்
மொத்தமாய் சொல்லிவிடு.
பித்தனாய் நானும்,
பின்னாடி அலையாமல்.




  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS