24. உறாவாடிய ஊமை நெஞ்சம்

வானம்தான் நீல நிறம் என
அறியாத நான்
கடலைப் பார்த்து நம்பியதால்
தினம் தினம் கண்ணெதிரே
ஓடி மறைகின்றாள்
கடற்கரை நண்டாய் அவள்

கையில் ஏந்தலாம் என நான்
பின் தொடர்ந்தேன்
மணலும் கூட அங்கு
முள்ளாய்க் குத்துகின்றது
காலில் அல்ல
என் கண்களில்

இரக்கம் கொண்டு காதலித்தேன்
இன்னல் தொல்லை அறியாமல்
வெற்றுக் கூடாய் இருந்த
என் உள்ளத்தில்
வெறுமையாய் புகுந்த அவள்
உறவுகளைக் காவல் வைத்ததை
ஊமை நெஞ்சம் அறியவில்லை.




  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS