28. பாவக் காதல்

நினைவுகள் வருகின்ற வேளையிலே
நிம்மதியிழந்து போகின்றேன்.
அவளின்றி நடக்கும் போதெல்லாம்
தலை சுற்றி நானும் வீழ்கின்றேன்.

இரத்த கொதிப்பா...?
இணையாத தவிப்பா...?
இடைவெளியில் வெந்து போவது
காதலின் தப்பா..?

பிரிந்து சென்ற சோகங்கள்
பிரியாது இருக்கையிலே,
புரியாமல் சென்றதற்கு
புதிரென்ன போடுவது..?

மெத்தையில் வைத்த அட்டையாய்
நழுவிக்கொண்டு போய் விட்டாள்,
வசதி வாய்ப்பு தேடி வர
ஜோடியொன்றைத் தேடி விட்டாள்.

சரியா..? தவறா..? புரியவில்லை,
தவறாமல் நினைக்கின்றேன் அவளைத்தான்,
தலை முழுகிப் போனபின்பு,
உலரவில்லை இன்னும் தான்.

காரணக் காதல் போலியானது
கைவிட்டுப் போய் நிருபனமானது
பெண்ணின் காதல் பாதை மாறுகின்றது
ஆணில் காதல் நொந்து துடிக்கின்றது.



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS