31. காதல் பறவைகள்


நீல வான ஓடையில்
நீளமான பாதையில்
ஜோடி சேர்ந்து பறந்த
பாசமான பறவைகள்.

வெண்ணிலவின் ஒளியினிலே
ஓடித்திரிந்த வேளையிலே
மின்மினிப் பூச்சிகளாய்
பளிச்சிட்ட மின்னொளியாய்
பாசமழையை
பகிர்ந்து கொண்ட ஞாபகங்கள்.

நட்பென்னும் கடலிலே
நீந்துகின்ற படகாக
அலையடித்தும் விலகாத
நிலையான பிணைப்பானோம்.

அன்புக்கடலிலே ஒரு சுனாமி
மீண்டும் வந்து அடித்தாலும்
நட்பென்ற நம் சிலைதான்
நடுங்காது அதைக் கண்டு.

சிதைந்து போகும் சிலைகளுக்குள்
நிலையான நம் நட்பு
குலையாது வாழுமடா
நூறாண்டு போகுமடா...!

தாமரை இலையில் தண்ணீராய்
தடம் புரலும் வாழ்க்கையிலே
அடுக்கடுக்காய் அனர்த்தங்கள்
ஆயிரம் கோடி வந்தாலும்
அன்பென்ற நம் பிணைப்பு
குலையாது நீளுமடா........!
.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS