34. இன்னொரு பிரபஞ்சம்

மூச்சுக் காற்றுப் பட்டு
ஜீவன் இன்று வாழ்கின்றது,
ஒன்றிணைந்து வாழ்வதற்கு
ஆயுள் கொஞ்சம் நீள்கின்றது.

கடந்து சென்ற ஞாபகங்கள்
கண்களுக்கிடையில் ஊர்கையிலே.
காதல் தீபம் வந்து
ஒளிவிட்டு வீசுகின்றது.

இதமாய் உந்தன் குரல்
இசைபரப்பும் காற்றினிலே
இடைவெளியின்றிதான்
இமைப் பொழுதினில் நுழைகின்றது.

துவாரம் கொண்ட இதயத்திலே
தூய்மையாக நுழைந்து விட்டு
துருவித்துருவி அழைக்கின்றாய்
தூக்கத்தை ஏனோ குலைக்கின்றாய்.

உப்பு நீர் வடிகையிலே
கண்ணிரெண்டும் எரிகின்றது.
உன்னை மட்டும் நினைக்கையிலே
தன்னித்து அது மறைகின்றது.

சேர்வோம் என்ற நினைவோடு
சோகம் கொண்டு வாழ்கையிலே
சோர்ந்து நானும் போகாமல்
சேரும் நாளை அழைக்கின்றேன்.

இணைவோம் என்ற செய்தி
இணையத்தில் வந்திடுமா..?
இதயத்தின் துடிப்புத்தான்
இன்பமாய் சிரித்துடுமா..?



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS