உயிர் ஜீவன் கலந்ததுவாய்
எனக்குள்ளே ஓர் உணர்வு
உன் நினைவு தீண்டையிலே
கனவிலும் ஓர் இணைவு.
காற்றில் ஏறிச்சென்ற காதலனே..!
உன்னைக் காத்திருக்கவா..?
கரைந்திருக்கவா..?
விழியிரண்டும் வலிக்குதடா,
உன் நிழல் விழுந்த தடத்திலே
நினைவுகளும் துடிக்குதடா...
நித்திரையில் தூங்கையிலே....
கை நழுவிச் சென்றாயா..?
கை கழுவிச்சென்றாயா..?
கண்ணீர் துளிகள்
என்னைக் கொல்கின்றது.
சிந்தும் கண்ணீராய்
இரத்தம் வடிகின்றது
சிறிதும் பிணையாது
இமைகள் விழிக்கின்றது
கண்ணாளனே....!
காரணமின்றி
கை விட்டுச் சென்றதேனடா..?
என் அன்பு தொரியவில்லையா..?
காதல்தான் புரிய வில்லையா..?
எனக்குள்ளே ஓர் உணர்வு
உன் நினைவு தீண்டையிலே
கனவிலும் ஓர் இணைவு.
காற்றில் ஏறிச்சென்ற காதலனே..!
உன்னைக் காத்திருக்கவா..?
கரைந்திருக்கவா..?
விழியிரண்டும் வலிக்குதடா,
உன் நிழல் விழுந்த தடத்திலே
நினைவுகளும் துடிக்குதடா...
நித்திரையில் தூங்கையிலே....
கை நழுவிச் சென்றாயா..?
கை கழுவிச்சென்றாயா..?
கண்ணீர் துளிகள்
என்னைக் கொல்கின்றது.
சிந்தும் கண்ணீராய்
இரத்தம் வடிகின்றது
சிறிதும் பிணையாது
இமைகள் விழிக்கின்றது
கண்ணாளனே....!
காரணமின்றி
கை விட்டுச் சென்றதேனடா..?
என் அன்பு தொரியவில்லையா..?
காதல்தான் புரிய வில்லையா..?







