6. நீயே எனதுயிர்.


உன்னைத்தான் எழுதுகின்றேன் வரியாக,
நீயே எந்தன் ஒளியாக,
உயிரைக் கொண்டு வார்த்தைகளை உருக்கி
எடுக்கின்றேன் சிலையாக...

இமைகள் திறந்து படிப்பாயா..?
இதயம் திறந்து அழைப்பாயா..?
இளமைக்காலம் போகும் வரை
இப்படியே நடிப்பாயா..?

கவிதையில் தான் காதலென்றால்
காலம் அதை ஏற்காது,
காதலித்தவன் எல்லாம் கவிஞனென்றால்
காவியங்கள் நிலைக்காது.

கை பிடித்து இணைய வந்தால்
கை நழுவிச் செல்கின்றாய்
கற்பனையில் நீ வந்து
கவியாக மலர்கின்றாய்.....

பெண்ணே..!
உனக்காய் காத்திருப்பேன்
காலம் உள்ளவரை காதலுடன்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS